News August 9, 2024
வேலூரில் பிரபல ரவுடி கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். வேலூர் சிறையில் உள்ள நாகேந்திரனை கைது செய்தற்கான வாரண்ட் அவரிடம் வழங்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தையும், வட சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவருமான நாகேந்திரன் தற்போது சிறையில் உள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 21, 2025
வேலூர்: கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (நவ.21) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News November 21, 2025
வேலூர்: வாக்காளர் கணக்கீடு படிவங்கள் 96% விநியோகம்!

வேலூர் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியல் (SIR) கணக்கீடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் வீடு வீடாக சென்று (SIR) படிவங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 96 சதவீத மக்கள் வரை சென்றுவிட்டதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ள பகுதிகளில் விரைவில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மேலும், பொதுமக்கள் படிவங்களை கவணத்துடன் எழுதவேண்டும் என அறிவுருத்தினர்.
News November 21, 2025
வேலூர்: மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு!

வேலூர், வாக்காளர் திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்காக வருகிற (நவ.22 மற்றும் 23) ஆகிய இரண்டு நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். இந்த முகாம்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை திருத்த செயல்படுகிறது.


