News January 24, 2025
வேலூரில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக்கொலை

சத்துவாச்சாரியைச் சேர்ந்த செல்வகுமார்(38), இன்று காலை 11 மணியளவில் சேண்பாக்கம், ராகவேந்திரா கோவில் பின்புறம் உள்ள சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது செல்வகுமாரை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள், செல்வகுமாரை பைக்கில் இருந்து கீழே தள்ளி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து தகவலறிந்த வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
வேலூரில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் இன்று (நவ.13) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலந்தாய்வுக் கூட்டத்தில் பல்வேறு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
News November 13, 2025
வேலூர்: யோகா பயிற்சியாளர் தேர்வு -கலெக்டர் தகவல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வேலூர் மாவட்டத்தில் யோகா பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர்கள் தங்களுடைய பயோ டேட்டா மற்றும் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகலுடன் வரும் நவம்பர் 19-ம் தேதி மாலை 4 மணியளவில் காட்பாடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேரில் வந்து கலந்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
வேலூர்: பஸ் ஸ்டாண்டில் இறந்து கிடந்த முதியவர்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, ஒடுக்கத்தூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று (நவ.12) முதியோர் ஒருவர் இறந்து கிடப்பதாக வேப்பங்குப்பம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற அதிகாரிகள், உடலை மீட்டு, அந்த முதியவர் யார் என்ற விவரங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


