News January 25, 2025

வேலூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

image

வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணியை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஜனவரி 25) காலை 10:30 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். 

Similar News

News February 22, 2026

வேலூர்: பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை!

image

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் <>TamilNilam <<>>Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share பண்ணுங்க!

News February 22, 2026

வேலூர்: கார் கவிழ்ந்து பெரும் விபத்து – மூவர் படுகாயம்

image

காட்பாடி அருகே பெத்தநாயுடு பாளையத்தைச் சேர்ந்த தருண் (24) மற்றும் அவரது உறவினர்கள் இருவர், காய்கறி சந்தைக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். பொன்னை அணைக்கட்டு அருகே நிலைதடுமாறிய கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மூவரையும் மீட்ட போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 22, 2026

வேலூர்: குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

image

வேலூர் மாவட்டம், பொன்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகனின் மனைவி செல்வி (49). தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறால், மனமுடைந்த செல்வி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனளிக்கவில்லை. இச்சம்பவம் குறித்து பொன்னை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!