News August 18, 2024
வேலூரில் தேசிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24- ல் மாநில அரசின் விருது பெற சிறந்த சேவை மற்றும் வீரதீர செயல் புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் பாராட்டு பத்திரம் மற்றும் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்படும். எனவே தகுதியானவர்கள் (http://awards.tn.gov.in) என்ற இணையதள பக்கத்தின் வாயிலாக 30.09.2024க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
வேலூர்: காதல் தகராறில் இளைஞர் தற்கொலை!

பள்ளிகொண்டா, பிராமணமங்கலம் புதுமனை பகுதியை சேர்ந்தவர் மோனிஷ் (29), பெங்களூருவில் உள்ள ஒரு பெண்ணை 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், மோனிஷின் பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்நிலையில், மோனிசுக்கும் அந்த பெண்ணிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மோனிஷ் நேற்று (டிச.2) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 3, 2025
காட்பாடியில் ரூ.1.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (டிச.3) 341 மாற்றுத்திறனாளிகளுக்கு 1.41 கோடி மதிப்பிலான நல திட்ட உதவிகளை காட்பாடி விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், துணை மேயர் சுனில்குமார் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News December 3, 2025
வேலூர்: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

வேலூர் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <


