News August 14, 2024
வேலூரில் தேசிய பெண் குழந்தை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு சமூக முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை, வீரதீர செயல்புரிந்த 13-18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை விருதும், மாநில அரசின் சார்பில் 1 லட்சத்துக்கு காசோலை வழங்கப்படும். எனவே தகுதியானவர்கள் http:// awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 15, 2025
வேலூரில் தேசிய குழந்தைகள் தின உறுதி மொழி

வேலூர் மாவட்டத்தில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சு தலைமையில் இன்று (நவ.14 ) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய குழந்தைகள் தின உறுதிமொழியை அனைவரும் எடுத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
News November 14, 2025
வேலூர்: INOX-இல் சூப்பர் வேலை!

வேலூரில் இயங்கி வரும் செல்வம் ஸ்கொயரில் உள்ள PVR-INOX சினிமாவில் Operations Associate பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் அனுபவத்திற்கு ஏற்றாற்போல சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு 40 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நவம்பர். 30ம் தேதிக்குள் இந்த <
News November 14, 2025
வேலூர்: இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

வேலூர் மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (0416-2220893) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!


