News March 26, 2025

வேலூரில் கலை சங்கமம் திருவிழா துவக்கம்

image

வேலூர் மாவட்டம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள டவுன் ஹாலில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் சங்கமம் கலை திருவிழா நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 26) மாலை 6:00 மணி அளவில் துவக்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 15, 2025

வேலூர்: நகைக்கடையில் கைவரிசை – 3 ஆண்டுகள் சிறை!

image

வேலூர்: தோட்டப்பாளையத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் நகை வாங்குவது போல் நடித்து 5 பவுன் வளையல்களை திருடி சென்ற விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பானுமதி (39), அமராவதி (48) ஆகியோரை வேலூர் வடக்கு போலீசார் கைது செய்து நகையை மீட்டனர். இந்த வழக்கின் விசாரணை நேற்று (நவ.15) ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்தது. இதில் பானுமதி, அமராவதி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

News November 15, 2025

வேலூர்: போக்சோ வழக்கு – கோர்ட் அதிரடி தீர்ப்பு!

image

வேலூர்: கடந்த 2018ம் ஆண்டு வேலூர் வடக்கு போலீஸாரால் முஸ்கான் என்பவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு நேற்று (நவ.14) வேலூர் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு முஸ்கான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

News November 15, 2025

வேலூரில் இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

image

வேலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை, காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இன்று (நவ.15) நடத்த உள்ளது. முகாமில் 100க்கு மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமார் 10,000 இடங்களுக்கு பணி வாய்ப்பை ஏற்படுத்தப்படுகிறது. அனைவருக்கும் அனுமதி இலவசம்.

error: Content is protected !!