News August 16, 2024

வேலூரில் எம்எல்ஏ ஆய்வு

image

வேலூர் மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட 56வது வார்டில் உள்ள குமாரசாமி தெருவில் புதிய கால்வாய் அமைக்கும் பணியை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 16) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது இளநிலை பொறியாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News November 26, 2025

வேலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 26, 2025

வேலூர்: பெண் மீது பாய்ந்த துப்பாக்கித் தோட்டா!

image

கே.வி. குப்பம் மாச்சனூர் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் மனைவி ராமு ( 55). நேற்று (நவ.25 ) இவர் வீட்டில் இருந்தபோது, பறவைகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும், ஏர்கன் துப்பாக்கித் தோட்டா பாய்ந்தது. இதனால் ராமு காயம் அடைந்து, மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 26, 2025

வேலூர்: குழந்தை திருமணம் – குடும்பம் மீது பாய்ந்த போக்ஸோ!

image

வேலூர்: புதூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் (25), 17 வயது சிறுமிக்கும் ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி திருமணம் நடந்தது. இதை அறிந்த கிராம நல அலுவலர் சித்ரா நேற்று மணிகண்டன் வீட்டிற்கு விசாரணைக்கு சென்றார். அவரை அங்கு பணி செய்யவிடாமல் மணிகண்டன் தடுத்துள்ளனர். இது தொடர்பாக மணிகண்டன் உட்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!