News March 25, 2025
வேலூரில் உயர்கல்வி மாபெரும் கருத்தரங்கு

வேலூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி ஸ்டேடியத்தில் ஏப்ரல் 12,13 ஆகிய தேதிகளில் வழிகாட்டி உயர்கல்வி கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் 10,12 வகுப்பு முடித்த மாணவர்கள் எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம் என்று ஆலோசனை வழங்க உள்ளனர். இந்த அறிய வாய்ப்பை வேலூர் மாவட்ட மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஐடி வேந்தர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு கலந்து கொள்ளனர்.
Similar News
News December 4, 2025
வேலூர்: PARTNERSHIP-ல் மோசடி செய்த பெண்!

வேலூர்: ரங்காபுரத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுடன் சோ்ந்து, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பொறியாளா், பார்ட்னர்ஷிப்பில் வேலூா்-சென்னை நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அமைத்துள்ளார். ஆனால் அந்த பெண் வருமானத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், தனது பான் கார்டை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில், டிஎஸ்பி பழனியிடம் புகார் மனு வழங்கியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 4, 2025
வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலூர் மாவட்டத்தில் விண்ணப்ப படிவங்களை https://vellore.nic.in, www.tnpcb.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப நகலுடன், 2 நகல்கள் கலெக்டரிடம் ஜனவரி 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.