News September 14, 2024
வேலூரில் இன்று நடந்த குரூப் 2 தேர்வில் 3,464 பேர் ஆப்சென்ட்

தமிழக முழுவதும் இன்று நடைபெற்ற குரூப் 2 முதல் நிலைத் தேர்வு 2127 இடத்திற்கு. 7.93 லட்சம் பேர் தேர்வு எழுதினார், அதில். வேலூர் மாவட்டத்தில் இன்று நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2A ஆகிய தேர்வுகளில் பங்கேற்க 13,139 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அவர்களில் 9,675 பேர் இன்று தேர்வு எழுதினர், 3464 பேர் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News November 20, 2025
வேலூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களான குடியாத்தம், காட்பாடி, கே.வி. குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (நவ.20) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News November 20, 2025
வேலூர்: கலெக்டர் முக்கிய அறிவிப்பு…!

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வருகிற (நவ.22) சனிக்கிழமை மற்றும் (நவ.23) ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
வேலூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

வேலூர் மாவட்ட மக்களே வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


