News August 9, 2024
வேலூரில் இன்று தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம்

வேலூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள ஊரீசு கல்லூரியில் இன்று தொடங்கி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
வேலூர்: 10th, 12th போதும், 14,967 காலியிடங்கள்!

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் <
News December 10, 2025
வேலூர்: கலெக்டர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (டிச.10) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசு அலுவலர்கள் மனித உரிமைகள் தின உறுதி மொழியை எடுத்துகொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், துணை ஆட்சியர் ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News December 10, 2025
வேலூர்: எருது விடும் விழா ஆலோசனை கூட்டம்

2026 ஆம் ஆண்டு எருது விடும் விழா நடத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று(டிச.10) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் எஸ்பி மயில்வாகனன், டிஆர்ஓ சிவசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர்கள் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


