News March 30, 2024
வேலூரில் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் அதிமுக கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்த நிலையில், நேற்று மாலை இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட செயலாளர் தலித் குமாருக்கு அதிமுக நகர செயலாளர் ஜே.கே.என்.பழனி சால்வை அணிவித்து வேலூர் மாவட்ட வேட்பாளரை ஆதரிக்கும் வேண்டினர். கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்கள் உடன் இருந்தனர். தொடர்ந்து வாக்கு சேகரித்தனர்.
Similar News
News February 7, 2026
வேலூர்: லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் சுரேஷ் ( 57), தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று அதிகாலை சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது கன்டெய்னர் லாரி அவர் மீது மோதி படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 7, 2026
வேலூர் அருகே பெண் பரிதாப பலி…

வேலூர் பலவன்சாத்து குப்பம் பகுதியை சேர்ந்தவர் கவுரி ( 48), கடந்த 5 ஆண்டுகளாக மனநல சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று அதிகாலை, கழிவறை சுத்தம் செய்யும் திராவகத்தை கவுரி குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கவுரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 7, 2026
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.6) இரவு முதல் இன்று (பிப்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


