News March 24, 2025
வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

படப்பை அருகே மகாண்யம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன், 53. இவர் ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து மகாண்யத்திற்கு, பைக்கில் சென்றுள்ளார். ஸ்ரீபெரும்புதுார் – மணிமங்கலம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது அந்த வழியே சென்ற மினி வேன், பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அன்பழகன், சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.
Similar News
News December 1, 2025
JUST IN: காஞ்சிபுரம்: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

‘டிட்வா’ புயல் காரணமாக நாளை (டிச.2) காலை 8 மணி வரை காஞ்சிபுரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க!
News December 1, 2025
FLASH: ‘டிட்வா’ புயல்; காஞ்சிக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்!

‘டிட்வா’ புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வந்தது. டிட்வா புயல் வலுவிழந்து, மணிக்கு 3 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து அலெர்ட்டாக இருக்க சொல்லுங்க.
News December 1, 2025
காஞ்சிபுரம்: 10th PASS.. AIIMS-ல் வேலை ரெடி.! APPLY NOW

காஞ்சிபுரம் மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <


