News August 14, 2024
வேதாரண்யம் மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள்

வேதாரண்யம் அருகே ஆற்காட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சந்திரகாசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஆயுதங்களுடன் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் சிலர் படகில் இருந்த 200 கிலோ வலை, ஜிபிஎஸ் உள்ளிட்டவற்றை அபகரித்து விட்டு மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். கரை திரும்பிய மீனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News July 11, 2025
நாகை கடற்கரையில் நாய்கள் கண்காட்சி அறிவிப்பு – கலெக்டர்

நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நாய்கள் கண்காட்சி வரும் ஜூலை 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பங்குபெறும் சிறந்த நாய்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7500, மூன்றாம் பரிசாக ரூ.5000 என வழங்கப்பட உள்ளது. எனவே இந்நிகழ்வில் செல்ல பிராணிகள் வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE NOW !
News July 10, 2025
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி; ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கி ஆகஸ்ட் மாத இறுதி வரை நடக்கிறது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள முன் கள பணியாளர்கள் தங்கள் பகுதிக்கு வரும் போது அவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News July 10, 2025
நாகை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய பணம்

நாகை மாவட்டம் பால்பண்ணைசேரியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணம் கைமாறுவதாக நாகை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.1.59 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அங்கு உள்ள அனைத்து அறைகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.