News August 14, 2024
வேதாரண்யம் மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள்

வேதாரண்யம் அருகே ஆற்காட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சந்திரகாசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஆயுதங்களுடன் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் சிலர் படகில் இருந்த 200 கிலோ வலை, ஜிபிஎஸ் உள்ளிட்டவற்றை அபகரித்து விட்டு மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். கரை திரும்பிய மீனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
BREAKING: நாகை மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News November 24, 2025
நாகை கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு வருகிற 26ந் தேதி நேர்முக தேர்வு நடைபெற்றவுள்ளது. இத்தேர்வானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
நாகை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!


