News April 22, 2025
வேதாரண்யம் – சென்னை நேரடி ரயில் தேவை

அகஸ்தியம் பள்ளி வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு ரயில் கோச் மாறாமல் செல்லும் வகையில் நேரடி ரயில் போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என்று வேதாரண்யம் வர்த்தகர் சங்கத்தினர் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட பொது மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 23, 2025
நாகையில் அதிகபட்சமாக 4.2செ.மீ மழை பதிவு

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பரவலாக விட்டுவிட்டு மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரங்கள் நாகை 4.2செ.மீ, திருப்பூண்டி 2.6செ.மீ, வேளாங்கண்ணி 3.9செ.மீ திருக்குவளை 3.4செ.மீ தலைஞாயிறு 1.6செ.மீ வேதாரண்யம் 3.8செ.மீ, கோடியக்கரை 2.6செ.மீ ஆகவும், மாவட்டத்தில் பதிவான மொத்த மழையின் சராசரி அளவு 3.1செ.மீ பதிவாகியுள்ளது
News November 23, 2025
நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை -எச்சரிக்கை

நாகை மாவட்டத்தில் நேற்று(நவ. 22) இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் வருகின்ற நவ.24ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
News November 22, 2025
நாகப்பட்டினம்: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30,OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!


