News March 19, 2024
வேட்பாளர் வங்கி கணக்கு கண்காணிக்க உத்தரவு

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வேட்பாளர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1 லட்சத்திற்கு அதிகமான பண பரிமாற்றங்கள் நடந்திருந்தால் அது குறித்த தகவல்களை வங்கிகள் தெரிந்திருக்க வேண்டும். ஒரே வங்கி கணக்கு மூலம் பல வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்திருந்தால் அதன் விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும் என நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
நெல்லை அரசு பள்ளியில் மாணவர்கள் கோஷ்டி மோதல்

ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவர்கள் இன்று காலை ஒருவரை ஒருவர் தாக்கி கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து ஆசிரியர்கள் அங்கு விரைந்து வந்த நிலையில் மாணவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனாலும் மாணவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 18, 2025
நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

நெல்லை மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற செப்டம்பர் 26ம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். எனவே மாவட்டத்தின் அனைத்து பகுதி விவசாயிகளும் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
மனநல நிறுவனங்கள் மனநல ஆணையத்தில் பதிவு செய்ய உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; விரைவில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையங்கள் ஆகியவை முறையாக பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து நிறுவனங்களும் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய உத்தரவு.