News October 25, 2024

வேடந்தாங்கலில் பறவைகள் வரத்து தொடங்கியது

image

வேடந்தாங்கலில் தற்போது சீசன் களைகட்டியுள்ள நிலையில் பறவைகள் காணப்படுகின்றன. கொத்தி நாரை, சாம்பல் நாரை, புள்ளி மூக்கு வாத்து உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேல் பறவை இனங்கள் சரணாலயத்தில் வந்துள்ள நிலையில் FTC மூலம் விவசாயிகளுக்கு களப் பயிற்சிகள் அளிக்கவும் சரணாலயத்தை சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்ய அரசு அதிகாரிகள் ஆவணங்கள் செய்ய வேண்டும் என்று உத்திரமேரூர் விவசாயிகள் கூறுகின்றனர்.

Similar News

News September 16, 2025

பிரதமர் மோடிக்கு விவசாயிகள் பிறந்தநாள் வாழ்த்து

image

நாளை பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பி.எம்.கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்திற்கும், விவசாயிகளுக்கு நெற்பயிர்களுக்கு குவின்டாலுக்கு 2500 ரூபாய் உயர்த்தி கொடுத்ததற்காகவும் நன்றி தெரிவிக்கும் வகையில் அப்பகுதி விவசாய மக்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிரில் மோடியின் பெயரை வரைந்து வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தெரிவித்தனர்.

News September 16, 2025

காஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் குன்றத்தூர் ஒன்றியத்தில் சேக்கிழார் நகர், வரதராஜபுரம் ஊராட்சி மற்றும் பூந்தண்டலம் கிராமம், திருப்பெரும்புதூர் ஒன்றியத்தில் கிளாய் ஊராட்சி ஆகிய இடங்களில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.

News September 16, 2025

துணை முதல்வரிடம் காஞ்சி விவசாயிகள் மனு

image

காஞ்சி விவசாயிகளின் நீர் பாசனத்துக்கு பயன்படும் பிவிசி பைப்புகள், பயோ சார் கோல் பிளான்ட் விவசாய கழிவுகள், பயோ கேஸ் அமைப்புகளை 50% மானியத்திலும் , காஞ்சியில் விவசாயக் கல்லூரி, கே வி கே அமைக்கவும், கரும்புக்கு கூட்டுறவு துறை போன்று தனியார் துறையிலும் ரூ 4000 வழங்க கோரி துணை முதல்வரிடம் மாநில விவசாய சங்க தலைவர் கே எழில் இன்று மனு அளித்தார்.

error: Content is protected !!