News January 24, 2025
வேங்கை வயல் விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேருக்கு தொடர்புள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இதில் முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை பழி வாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
Similar News
News December 8, 2025
புதுகை: மதுபோதையில் அட்டகாசம்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் லட்சுமி தியேட்டர் அருகே சின்னையா (52) என்பவர் நேற்று மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்த அந்த வழியிலிருந்து பணியில் ஈடுபட்டிருந்த கீரனூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் சின்னையாவிடம் விசாரணை மேற்கொண்டு பிணையில் விடுவித்தனர்.
News December 8, 2025
புதுகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, விராலிமலை, பொன்னகுளம், மேலத்தானியம், நகரபட்டி, கொன்னையூர், குளத்தூர், பாக்குடி, இலுப்பூர் மற்றும் மாத்தூர் துணைமின் நிலையங்களில் நாளை ( டிச. 9) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதனை அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க
News December 8, 2025
புதுகை: கார் மோதி பரிதாப பலி!

வாடியான்களத்தை சேர்ந்தவர் அழகர் (86). இவர் நேற்று முன்தினம் சைக்கிலில் விராலிமலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் அழகர் ஓட்டிசென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முதியவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அங்கு அழகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்


