News April 19, 2025
வெள்ளியங்கிரி மலையில் ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடியைச் சேர்ந்த புவனேஷ்வரன் (18) என்ற இளைஞர், கோவை, வெள்ளிங்கிரி மலையில் ஏழாவது மலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, நேற்றிரவு கீழே இறங்கியுள்ளார். அப்போது கால் தவறி கீழே சரிந்த அவர், 10 மீட்டர் ஆழத்தில் உருண்டு விழுந்துள்ளார். உடனடியாக டோலி பாரம் தூக்கும் பணியாளர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News December 7, 2025
கோவையில் அதிர்ச்சி: 5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. அதில் இறந்தவர்கள் 1,13,861, வீட்டில் ஆள் இல்லாதவர்கள், இடம் மாறியவர்கள், இரட்டை வாக்குரிமை 3,92,533 என மொத்தமாக 5,06,394 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 7, 2025
கோவையை உலுக்கிய சம்பவம்: பாய்ந்த குண்டாஸ்

கோவையில் விமான நிலையம் பின்புறம் சில தினங்களுக்கு முன்னர் மாணவி ஒருவர் மூவர் கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் கருப்பசாமி, கார்த்தி, தவசி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். மூவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதன் பேரில் இன்று போலீசார் கைது செய்தனர்.
News December 6, 2025
தபால் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை தபால் பிரிவின் அரையாண்டு ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் (டிசம்பர் 30) அன்று காலை 11 மணிக்கு கோவை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஓய்வூதிய குறைகள் உள்ளோர் மனுக்களை (டிசம்பர் 20)-க்குள் சீனியர் சூப்பிரண்டு, கோவை – 641001 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


