News February 15, 2025

வெள்ளியங்கிரியில் குவியும் பக்தர்கள்

image

வெள்ளியங்கிரிக்கு பிப்.26 அன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வெள்ளியங்கிரிக்கு செல்ல கடந்த 1 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கிய நிலையில், பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மேலும், பக்தர்களுக்கு ஆங்காங்கே மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 2, 2025

சூலூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி

image

சூலூர் அருகே சுகந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சூலூர் நோக்கி வந்த போது, பாப்பம்பட்டி பிரிவில் லாரியில் எதிர்பாராத விதமாக மோதி டயரில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தார். மகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 2, 2025

கோவை: ஆதார் அட்டையில் திருத்தமா?

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. (ஷேர் பண்ணுங்க)

News November 2, 2025

பொள்ளாச்சி அருகே பயங்கர விபத்து: ஒருவர் பலி

image

பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் (24). இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இரவு 8 மணியளவில் அம்பராம்பாளையம் அருகே அரசு பேருந்து மோதியது. இவ்விபத்தில் அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!