News December 4, 2024

வெள்ளம் பாதித்த 151 இடங்களில் தூய்மை பணி

image

கடலூரில் வெள்ளம் பாதித்த 16 ஊராட்சிகளை சேர்ந்த 66 உட்கடை கிராமங்கள், அண்ணாகிராமத்தில் 17 ஊராட்சிகளை சேர்ந்த 57 உட்கடை கிராமங்கள், பண்ருட்டியில் 7 ஊராட்சிகளை சேர்ந்த 28 உட்கடை கிராமங்கள் என மொத்தம் 40 ஊராட்சிகளை சேர்ந்த 151 இடங்களில் 2,045 தூய்மைப் பணியாளர்கள் மூலம் 361 கிலோ பிளிச்சங் பவுடர் தெளித்து தூய்மை பணி நடந்தது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News January 5, 2026

கடலூர்: மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்

image

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த விதேசி (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் தேசி, மாணவியை சந்திக்க நேரில் அழைத்து, சைக்கிள் ஓட்ட சொல்லித்தருவதாகக் கூறி, மாணவியிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடலூர் போலீசார், தேசி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 5, 2026

கடலூர்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 5, 2026

கடலூர்: பெண் தீக்குளித்து தற்கொலை!

image

நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் வீரமணி மனைவி உமா (40). இவரது கொழுந்தன் மகள் திருமண அழைப்பிதழில் தனக்கு பிடிக்காதவர்களின் பெயர் உள்ளதால், யாரும் திருமண நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என வீரமணியுடன் உமா தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!