News December 4, 2024
வெள்ளத்தில் 14 பேர் இதுவரை உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக, வெள்ளம் ஏற்பட்டது. இதனால், விக்கிரவாண்டி வட்டத்தில் 6 பேர், விழுப்புரம் வட்டத்தில் 5 பேர், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தில் 2 பேர், வானூர் வட்டத்தில் ஒருவர் என இதுவரை 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மாவட்டத்தில் வெள்ளத்தால் 26 சாலைகள் சேதமடைந்த நிலையில், 17 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும்.
Similar News
News September 17, 2025
விழுப்புரம்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

விழுப்புரம் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News September 17, 2025
இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய எம்ஆர்கே

விழுப்புரத்தில் உள்ள ஏ.கோவிந்தசாமி மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு, தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் க.பொன்முடி, இரா.லட்சுமணன், செஞ்சி மஸ்தான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News September 17, 2025
விழுப்புரத்தில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழியினை அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று (17.09.2025) ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பொறுப்பு திரு.ராஜூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.