News December 5, 2024
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10,879 பேருக்கு பால் பாக்கெட்

ஃபெஞ்சல் புயலின் காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு 35 முகாம்களில் 19,654 நபர்கள் தங்கவைக்கப்பட்டனர். இவர்களுக்கு 15 இடங்களில் சமையல் கூடம் ஏற்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டு தினந்தோறும் 3 வேளை 88,650 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 10,879 நபர்களுக்கு பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது என கடலூர் கலெக்டர் தகவல் அளித்துள்ளார்.
Similar News
News July 5, 2025
கடலூர்: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!
News July 5, 2025
கடலூரில் சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி..!

கடலூர் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் (அ) அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு <
News July 5, 2025
கடலூர் துறைமுகத்தை இயக்க ஒப்பந்தம்

கடலூர் துறைமுகம் 111 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த துறைமுகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு உரங்கள், நிலக்கரி ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன. இதையடுத்து பல்வேறு காரணங்களால் துறைமுகத்தின் செயல்பாடு முடங்கியது. இந்நிலையில் கடலூர் துறைமுகத்தை மீண்டும் இயக்குவதற்காக தனியார் நிறுவனத்துடன் தமிழ்நாடு கடல்சார் வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.