News December 5, 2024
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10,879 பேருக்கு பால் பாக்கெட்

ஃபெஞ்சல் புயலின் காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு 35 முகாம்களில் 19,654 நபர்கள் தங்கவைக்கப்பட்டனர். இவர்களுக்கு 15 இடங்களில் சமையல் கூடம் ஏற்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டு தினந்தோறும் 3 வேளை 88,650 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 10,879 நபர்களுக்கு பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது என கடலூர் கலெக்டர் தகவல் அளித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
கடலூர்: மனைவி இறந்த துக்கத்தில் தற்கொலை

நெய்வேலியை சேர்ந்தவர் முனுசாமி (53). என்.எல்.சி-யில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கடந்த ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், மனவேதனையில் இருந்த முனுசாமி சரிவர பணிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று விரக்தியில் முனுசாமி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெய்வேலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
News November 21, 2025
கடலூர்: தவறி விழுந்த கொத்தனார் சாவு

ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த ஆனந்தன் (35). கொத்தனார் வேலை செய்து வந்த இவர் நேற்று தனது நண்பர் குமரனுடன் தவளக்குப்பத்துக்கு வேலைக்குச் சென்று விட்டு, மாலை டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மிளகாய் குப்பம் அருகே ஆனந்தன் திடீரென டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 21, 2025
கடலூர்: சிறையில் கைதி திடீர் சாவு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(58). இவர் கடலூர் மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று(நவ.20) உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


