News March 4, 2025
வெளியூர் செல்வோருக்கு திருச்சி காவல் துறையினர் எச்சரிக்கை!

வீட்டை பூட்டிவிட்டு நீண்ட நாட்கள் வெளியூர் செல்லுவோர் குறித்து காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வெளியே செல்வோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவும். பணம், நகை போன்ற பொருட்களை வங்கி லாக்கரில் வைத்துவிட்டு செல்வது பாதுகாப்பானது. சாவியை வீட்டில் உள்ள இடங்களிலேயே வைத்துவிட்டு செல்வதை தவிர்க்கவும் என்று பொது மக்களுக்கு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 26, 2025
திருச்சி: வெளிநாட்டு மாணவர் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் விசா காலம் முடிவடைந்தும், சட்டவிரோதமாக தனியார் விடுதியில் தங்கியிருந்த, ருவாண்டா நாட்டை சேர்ந்த மாணவர் சேமா மன்சி பப்ரீஷ் (35) என்பவரை, வெளிநாட்டினர் பிராந்திய பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்து, திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் ஒப்படைத்தனர். அங்கு உரிய விசாரணைக்கு பின் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மூலம் அவர் ருவாண்டா நாட்டுக்கு நாடு கடத்தப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 26, 2025
திருச்சி: போதை பொருள் விற்பனை கும்பல் கைது

ஸ்ரீரங்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய நபரை நிறுத்தி போலீசார் விசாரணை செய்ததில், அவர் போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், போதை மாத்திரை விற்பனை கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4000 போதை மாத்திரைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
News November 26, 2025
திருச்சி: 15.38 லட்சம் எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம்

திருச்சி மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 23,68,967 வாக்காளர்களில் நேற்று (நவ.25) மாலை நிலவரப்படி 22,74,733 வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 15,38,829 வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்ப பெறப்பட்டு, செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


