News November 24, 2024

வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

image

திருச்சியில் இருந்து துபாய்க்கு செல்லும் பயணிகளை இன்று டிஆர்ஐ திருச்சி & சிஐயு, அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஸ்ரீ ஹமீத் பாசித் மற்றும் சிங்கப்பூர் செல்லும் ஸ்ரீ முகமது முஸ்தபா ஆகிய இரண்டு பயணிகளின் உடைமையில் ரூ.11,14,556/- & ரூ.12,26,900/- மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 3, 2026

திருச்சி காவல்துறை அறிவிப்பு

image

குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிப்போம் எனவும், குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க குழந்தைகளுக்கான உதவி எண் 1098 அல்லது திருச்சி மாவட்ட காவல் உதவி எண் 8939146100-ஐ அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News January 3, 2026

திருச்சி: தொழில் தொடங்க ரூ.15 லட்சம்!

image

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் ‘UYEGP’ என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000 – ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News January 3, 2026

தடுப்பூசி முகாம்: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

image

கால்நடை பராமரிப்பு துறை சார்பில், திருச்சி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வரும் 3ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் சுமார் 3 லட்சத்து 11 ஆயிரம் கால்நடைகள் பயன்பெற உள்ளன. காலை 6 மணி முதல் காலை 9:30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இம்முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!