News April 22, 2025

வெளிநாட்டுபணத்துடன் கிடந்த பர்ஸ் உரிமையாளரிடம் ஓப்படைப்பு

image

புதுகையில் இன்று (ஏப்.22) புதுநகர் பகுதியில் கிடந்த பர்ஸில் பத்தாயிரம் பணம்,சிங்கப்பூர் டாலர் 15 வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்களுடன் பர்ஸ் கீழே கிடந்தை சாலையோர வியாபாரி நாகூர் கனி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து, மச்சுவாடி உண்டியல் பகுதியை சேர்ந்த குணசேகரன் ரமேஷ் என்ற நபரிடம் சமூக ஆர்வலர் தினேஷ் கலை செல்வம் ஆகியோர் காவல்துறை அதிகாரிகள் முன் பர்ஸ் உரியவரிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை நபர்.

Similar News

News November 13, 2025

கந்தர்வகோட்டை அருகே சூதாட்டிய 4 பேர் கைது

image

கந்தர்வகோட்டை அடுத்த மஞ்சம்பேட்டை குளக்கரை அருகே நேற்று உதயகுமார் (37), ராஜா (49), கருப்பசாமி (44), பாலகிருஷ்ணன் (47) ஆகிய நான்கு பேரும் பணம் வைத்து சூதாட்டம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 கார்டுகளையும் ரூ.200 பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

News November 13, 2025

புதுக்கோட்டை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது<> TN nilam citizen portal <<>>தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 13, 2025

புதுக்கோட்டை: குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

image

புதுக்கோட்டை நார்த்தாமலை அடுத்த பூங்குடியில் முருகேசன் என்பவர் மகன் ஹரிணேஸ்வரன் (11) பூங்குடியில் உள்ள குளத்தில் (நவ.8) அன்று மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கியதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது தந்தை அளித்த புகாரில் வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!