News March 29, 2025
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி

தேனி பழனிசெட்டிபட்டி ஆசிரியர் காலனி ஆனந்தரூபன் 32. டிப்ளமோ இன்ஜினியர். இவர் எஸ்.பி.,சிவபிரசாத்திடம்அளித்த புகாரில், ‘தேனியில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் நிறுவன மேலாளர் குமார். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் ரூ.8.20 லட்சம் வாங்கினார். ஓராண்டு ஆன பின்பும் அனுப்பவில்லை.கொடுத்த பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றினார் இது போல் நால்வரிடம் ரூ.22.85 லட்சம் மோசடி செய்துள்ளார்.
Similar News
News April 3, 2025
தேனி மக்களுக்கு ஏப்ரல் 5 முக்கியமான நாள்

தேனி, பெரியகுளம், சின்னமனுார் செயற்பொறியாளர்கள் அலுவலகங்களில் ஏப்.5ல் காலை 11:00 முதல் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இதில் மின் கட்டண பிரச்னைகள், குறைந்த மின்னழுத்த புகார்கள் தீர்வு காணலாம். இதில் பொது மக்களின் கோரிக்கைகளுக்கு மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும். இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தேனி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
News April 3, 2025
வனப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது நடவடிக்கை – வனத்துறையினர்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மலைப்பகுதிகளில் அப்போது காட்டு தீ ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் வனப்பகுதிக்குள் அனுமதி இன்றி யாரும் செல்ல வேண்டாம் எனவும், அவ்வாறு அனுமதி இன்றி வனப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.