News May 16, 2024
வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு

திருப்பூர், நிப்ட்-டீ ஆடை வடிவமைப்பு கல்லுாரியில், தேசிய ஆடை வடிவமைப்பு மற்றும் நெட் பேஷன் டெக்னாலஜி நுழைவுத்தேர்வு நடந்தது. இத்தேர்வில், கிட்ஸ் கிளப் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர் சஜிஷ்னு பங்கேற்றார். தேசிய அளவில் 2 லட்சம் பேர் எழுதிய தேர்வில், 28வது இடமும், ஓ.பி.சி., என்.சி.எல். பிரிவில் 4ம் பெற்று, சாதனை படைத்தவருக்கு நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Similar News
News November 3, 2025
திருப்பூர்: லஞ்சம் கேட்டாங்களா? இதை பண்ணுங்க!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dsptprdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0421-2482816 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News November 3, 2025
திருப்பூர் அருகே சிக்கிய பாலிபர்.. கைது!

திருப்பூர்: அவினாசி அருகே முத்து செட்டிபாளையத்தில், அவினாசி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புருஷவா பகார்த்தி (வயது 28) என்பதும், அவரிடம் விற்பனைக்காக 3 கிலோ கஞ்சா இருந்ததும் தெரிய வந்தது. மேலும், போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News November 2, 2025
திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 02.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், காங்கயம், அவிநாசி பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதிகளில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அனுப்பவும்.


