News November 10, 2024
வெறிச்சோடியே நாமக்கல் பழைய பேருந்து நிலையம்

நாமக்கல் முதலைப்பட்டி பகுதியில் சுமார் 19 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து அமைக்கப்பட்டு இன்று 1 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. ஒரு சில பேருந்துகளை தவிர மற்ற பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டன. இதனால் நாமக்கல் பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு கடையில் வியாபாரம் குறைந்ததால் வருத்தமடைந்தனர்.
Similar News
News December 8, 2025
நாமக்கல்: சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது

நாமக்கல் மாவட்டத்தில் 2025ம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணி குறித்த விபரங்களுடன்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்(ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்தனை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
News December 8, 2025
முதல்வரை சந்தித்த நாமக்கல் ஆட்சியர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி சந்தித்தார். அப்போது கடந்த 18ந் தேதி அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில், இந்திய குடியரசு தலைவர் தலைமையில் நடைபெற்ற 6வது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழாவில் JSJB முன் முயற்சியின் கீழ் 7057 நீர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டதற்காக விருது வழங்கப்பட்டது. அதனை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
News December 8, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.08) நாமக்கல் – (தங்கராஜ் – 9498170895), வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (ராஜு – 9498114857) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.


