News March 26, 2025
வெயிலின் கொடுமையால் இறந்த முதியவர்

காரைக்குடி, வள்ளலார் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை(60). வீட்டை விட்டு கிளம்பி வேலைக்கு சென்றவர் தேவகோட்டையில் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து இறந்தார் என தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. (கோடையில் மதியம் 12 – 3 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே செல்வதை தவிர்க்கவும்)
Similar News
News August 9, 2025
சிவகங்கை: பேரூராட்சி செயல் அலுவலர்களின் எண்கள்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்களின் எண்கள்
கானாடுகாத்தான் – 04565-283583
நாட்டரசன்கோட்டை – 04575-234300
இளையான்குடி – 04564-265246
திருப்புவனம் – 04574-265391
மானாமதுரை – 04574-268237
நெற்குப்பை – 04577-245411
சிங்கம்புணரி – 04577-242939
திருப்பத்தூர் – 04577-266295
பள்ளத்தூர் – 04565-283683
கண்டனூர் – 04565-282044
News August 9, 2025
சிவகங்கை: மன அமைதி பெற இங்க போங்க.!

சிவகங்கை நகரசூரக்குடியில் அமைந்துள்ளது தேசிகநாதர் கோயில். இங்குள்ள பைரவர் சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு. ஒரு யாகத்தில் சூரியன் பங்கேற்று, சிவனை அழைக்காததால் ஆத்திரமடைந்த சிவன், சூரியனை தண்டித்தார்.பின்னர் சிவன் கருணை கொண்டு சாப விமோசனம் தந்தார்.இதனடிப்படையில் அங்கு கோயில் எழுப்பப்பட்டது. குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, மன அமைதி பெற இங்கு வழிபட்டால் நடக்கும் என்பது ஐதீகம்.
News August 9, 2025
ஆங்கிலேயர் கால கல்வெட்டு கண்டடுப்பு

ஆங்கிலேய ஆட்சியின் போது இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தையும், புதுக்கோட்டை அரசையும் பிரிக்கும் எல்லைக்கல் ஒன்று சிவகங்கை நெற்குப்பைக்கும் புதுக்கோட்டை வேந்தன்பட்டிக்கும் நடுவே உள்ள பள்ளத்துப்பட்டி விலக்கு அருகே புதர் மண்டிய இடத்தில் காணப்பட்டது. காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் வேலாயுதராஜா, புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவர் ராஜேந்திரன் ஆய்வு செய்தனர்.