News April 3, 2025
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கேன்சல் விதி தெரியுமா?

ரயில் பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்கையில் சில நேரம் வெயிட்டிங் லிஸ்ட் வரும். அந்த டிக்கெட்டில் நாம் பயணிக்க முடியாது. எனினும் டிக்கெட் கன்பர்ம் ஆகும் என்ற நம்பிக்கையில் பயணிகள் அதை வைத்திருப்பர். அந்த டிக்கெட்டை ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு கவுன்டரில் கொடுத்து கேன்சல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் பணம் திருப்பி தரப்படும். இல்லையேல் பணம் திருப்பித் தரப்பட மாட்டாது.
Similar News
News November 27, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக குறைந்தது

கடந்த மூன்று நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 குறைந்து ₹94,160-க்கும், கிராமுக்கு ₹30 குறைந்து ₹11,770-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம் விலை குறைய தொடங்கியதால், நகை பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
News November 27, 2025
தவெக அலுவலகத்தில் செங்கோட்டையன்

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு ஆதரவாளர்கள் புடைசூழ செங்கோட்டையன் சென்றுள்ளார். Ex. MP சத்யபாமாவும், KAS-ம் தனித்தனியாக காரில் சென்று இறங்க, சொந்த மாவட்டத்தில் இருந்து சொகுசு பஸ் மூலம் 100 பேரையும் கூட்டி வந்துள்ளனர். விஜய் முன்னிலையில் இன்று KAS தவெகவில் இணையவுள்ள நிலையில் புஸ்ஸி ஆனந்துக்கு இணையான பதவி அவருக்கு கொடுக்கப்படலாம் என விவரப்புள்ளிகள் கூறுகின்றனர்.
News November 27, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து நீக்கம்.. இபிஎஸ் அடுத்த அதிரடி

சேலம் ஆத்தூர் அருகே அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டச் இணைச் செயலாளரான சங்கர், தூய்மைப் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். இது அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில், கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சங்கர் நீக்கப்படுவதாக EPS அறிவித்துள்ளார்.


