News August 18, 2024
வெம்பக்கோட்டையில் பட்டாசு வெடி விபத்து

வெம்பக்கோட்டையில் பட்டாசு வியாபாரி குருவையாவிற்கு சொந்தமான மாட்டு தொழுவத்தில் கார்த்திக் என்ற வெல்டிங் தொழிலாளி வெல்டிங் பணி செய்துள்ளார். அப்போது தீப்பொறி பட்டு பட்டாசு வெடித்து சிதறியதில் வெல்டிங் தொழிலாளி கார்த்திக் மற்றும் மாட்டு தொழுவ உரிமையாளர் குருவையா படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News September 19, 2025
விருதுநகர்: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News September 19, 2025
விருதுநகரில் நாளை எங்கெல்லாம் மின்தடை? CLICK செய்யுங்க

விருதுநகர் துணைமின் நிலையத்தில் நாளை (செப். 20) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நகர், பழைய பஸ் நிலைய பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை. இதேபோல, பெரியவள்ளிகுளம் துணைமின் நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. நாளை விருதுநகர் மாவட்டத்தில் எங்கெல்லாம் மின்தடை என <
News September 18, 2025
விருதுநகர்: தலைமறைவாக இருந்த உதவியாளர் கைது

விருதுநகர் டாஸ்மாக் மதுபான குடோனில் உதவியாளராக பணிபுரிந்த பிரேம்குமார் ரூ.150 லஞ்சம் கேட்டதாக 2008-ம் ஆண்டு இவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2000 அபராதம் விதித்து ஸ்ரீவி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவானார். இவருக்கு ஐகோர்ட் உத்தரவுப்படி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மதுரையில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர்.