News February 26, 2025
வெண்ணங்கொடி முனியப்பனுக்கு சிறப்பு அலங்காரம்

சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ வெண்ணங்கொடி முனியப்பன் இன்று மாசி மாதம் மகா சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் சாமிக்கு சிறப்பு அலங்காரமாக பெருமான் தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. இதனை பக்தர்கள் அனைவரும் தரிசித்துச் சென்றனர்.
Similar News
News February 27, 2025
திருமணம் ஆகாதவிரக்தி வாலிபர் தற்கொலை

பாகல்பட்டி, பூமிநாயக்கன்பட்டி காலனியைக் சேர்ந்தவர் உதயகுமார்(22) இவர் இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என ஓமலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, பல இடங்களில் பெண் பார்த்தும் தனக்கு திருமணமாகவில்லை என்ற ஏக்கத்தில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்தது.
News February 27, 2025
குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

ஏற்காடு பகுதியைச் சேர்ந்தவர்கார்த்திக்(16). இவர் ஏற்காடு அருகே உள்ள சேட்டுக்காடு ஓடையில், நேற்று நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால், மேலே வர முடியாமல் நீரில் மூழ்கி கார்த்திக் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் ஏற்காடு போலீசார், கார்த்திக் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News February 26, 2025
சேலம் மாவட்ட காவல் இரவு பணி அதிகாரிகள் விவரம்

சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல் கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும் காவல்துறையினர் இரவு முழுதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி இன்று பிப்.26 ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்.