News March 28, 2025
வெட்டப்பட்ட தலையுடன் காவல்நிலையம் சென்ற பெண்!

நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி(31) விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்று காணாமல் போய் உள்ளது. இதனை அடுத்து, காணாமல் போன ஆட்டினை கறிக்கடையில் கண்டெடுத்த பூங்கொடி ஆட்டின் தலையுடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
நாகை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாகை மாவட்டத்திற்கு நேற்றைய தினம் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று (நவ.16) காலை நிலவரப்படி நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 16, 2025
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற நவம்பர் 18-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News November 16, 2025
நாகை: மாற்றுதிறனாளிகளுக்கான ஒவிய போட்டிகள்

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நவ.21 அன்று காலை 10 மணிக்கு நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு ஒவியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கபட உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


