News August 15, 2024
வீரமுத்துவேலுக்கு அப்துல் கலாம் விருது

இதுவரை நிலவின் தென் துருவத்தில் எந்த நாட்டின் விண்கலமும் தரையிறங்கியது கிடையாது. இந்த நிலையில், சந்திராயன் 3 மூலம் விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தறையிறக்கி ஒரே நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்தது. இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு முதலமைச்சர் இன்று அப்துல் கலாம் விருது வழங்கி கவுரவித்துள்ளார்.
Similar News
News December 13, 2025
விழுப்புரத்தில் காவல் எல்லைகள் மாற்றி அரசாணை

விழுப்புரத்தில் நீண்டகாலத்திற்கு பிறகு காவல் நிலைய எல்லைகள் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் நகர பகுதிகள் மட்டும் வரையறை செய்துள்ளதால், கிராமப் புறங்கள் ஒரே காவல் நிலைய கட்டுப்பாட்டில் பணி சுமையுடன் தொடர்கிறது. விழுப்புரம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 60 கிராமங்களில் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு சீரமைப்பு பணிகளை, விழுப்புரம் தாலுகா நகரம் மற்றும் மேற்கு காவல் நிலையம் ஈடுபடுகிறது.
News December 13, 2025
விழுப்புரம்: g-pay பயனாளர்களே இந்த Trick தெரிஞ்சிக்கோங்க!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 13, 2025
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை சரிபார்ப்பு

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில் பெல் நிறுவன பொறியாளர்களால் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை சரிபார்ப்புக்கு உட்படுத்தும் பணியினை விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (டிச.13) நேரில் பார்வையிட்டார்.


