News April 16, 2025
வீரபாண்டி திருவிழா நடைபெறும் நாட்கள்

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி மே 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 6ல் அம்மன் புறப்பாடு, மே 7ல் அம்மன் பவனி, மே 8 புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி, மே 9 அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல், மே 10 தெற்கு ரத வீதியில் ரத உற்சவம், மே 11 மேற்கு ரத வீதியில் ரத உற்சவம், மே 12 திருத்தேர் நிலைக்கு வருதல் நிகழ்ச்சி, மே 13 ஊர் பொங்கல் நடைபெற உள்ளது. ஷேர் செய்யவும்
Similar News
News January 10, 2026
தேனி: காய்கறி வியாபாரி கொலை… 2 பேர் கைது..!

கோம்பையை பகுதியை சோ்ந்த காய்கறி வியாபாரி ராஜ்குமாா் 2 தினங்களுக்கு முன் சாலையில் உடலில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். கொலை குறித்து போலீஸ் விசாரணையில் ராஜ்குமாருக்கும், முத்துராஜ் என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்தது தெரியவந்தது. இதனால் முத்துராஜ் கூலிப்படை சேர்ந்த 2 பேருடன் ராஜ்குமாரை கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
News January 9, 2026
தேனி: மகளிர் உரிமை தொகை வரலையா.? முக்கிய அறிவிப்பு

தேனி மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.
1.இங்கு <
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 9, 2026
தேனியில் FREE வக்கீல் சேவை..! தெரிஞ்சிக்கோங்க…

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.தேனி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04546-291566
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


