News May 15, 2024

வீணாகும் குடிநீர்: பொதுமக்கள் கோரிக்கை

image

மாரண்டஅள்ளி மல்லாபுரம் சாலையில் முன்பு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் 3 மாதங்களாக உடைந்து குடிநீர் வெளியேறி சாலையில் வீணாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் முறையிட்டோம் எவ்வித நடவடிக்கையும் இல்லை என குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Similar News

News October 18, 2025

தருமபுரி மக்களுக்கு நற்செய்தி

image

வடகிழக்கு பருவமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதியினை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளார்.

News October 18, 2025

தருமபுரி: வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் படிக்க கடனுதவி

image

தருமபுரி மாவட்டத்தில், வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி தொடர விரும்பும் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரக் கழகம் சார்பில் கடனுதவி வழங்கப்படுகிறது.கடன் வரம்பு – ரூ.15,00,000,வட்டி விகிதம் – 8%விண்ணப்பங்களை www.tabcedco.tn.gov.in m இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர்

News October 18, 2025

தருமபுரி மாணவர்கள் கவனத்திற்கு

image

தருமபுரி மாவட்டத்தில் புதியதாக துவங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் காரிமங்கலத்தில் 2025-ஆம் கல்வியாண்டிற்கான நேரடி சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தொழிற்பயிற்சி நிலையமானது கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படும். சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

error: Content is protected !!