News March 20, 2025
வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்க கூடாது – ராமதாஸ்

கிளியனூர் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று விலை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்க கூடாது. முப்போகம் விளையும் பூமியாக இருந்தாலும் பிளாட் போட்டு விற்கும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் பரப்பளவு விலை நிலங்கள் பட்டாவாக மாற்றம் முப்போகம் விளையும் பூமியாக இருந்தாலும் பிளாட் போட்டு விற்கும் நிலை உள்ளது. ஏரி குளம் நீர்நிலைகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை கூறினார்.
Similar News
News March 25, 2025
குறுக்கே வந்த நாய்; பயங்கர விபத்து

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையின் குறுக்கே நாய் சென்றதால் ஆம்னி பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்தார். இதனால் பேருந்தின் மீது பின்னால் வந்த கார் மோதியதுடன், காரின் பின்னால் மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த 5 பேர் காயம் அடைந்தனர்.
News March 24, 2025
விழுப்புரம்: ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்

விழுப்புரத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் மாவட்ட அளவிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு, தமிழ் ஆசிரியர் கழகம் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, வணிகவரி பணியாளர் சங்க பொதுச்செயலாளர் டேனியல் ஜெயசிங், வருவாய்த்துறை அலுவலர் சங்க பொதுசெயலாளர் சங்கரலிங்கம், சிறப்புரையாற்றினர்.
News March 24, 2025
விழுப்புரம்: உயிரிழந்த சிறுமிக்கு முதலமைச்சர் நிதியுதவி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், திருக்குணம் மதுரா கொசப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் 10 வயது மகள் காயத்ரி ஆடு மேய்டு கொண்டு இருந்த போது பாறையை வெடிவைத்து தகர்த்தபோது சிதறிய கருங்கல் தலையில் விழந்ததில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் மூன்று லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.