News January 2, 2025
வீட்டில் துணி துவைப்போர் கவனத்திற்கு…

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், குடிநீரை சேமிக்க சென்னை மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.துணி துவைக்க நேரடியாக குழாய்களை பயன்படுத்தும்போது 116 லிட்டர்கள் செலவாகிறது. இதுவே வாளிகள் மூலம் தனியே பிடித்து உபயோகித்தால், 26 லிட்டர்கள் மட்டுமே செலவாகிறது. எனவே, குழாய் மூலம் நேரடியாக பிடித்து உபயோகிப்பதை நிறுத்திவிட்டு, பிடித்து பயன்படுத்தி 80 லிட்டர் அளவு தண்ணீரை சேமிக்குமாறு தெரிவித்துள்ளது.
Similar News
News September 16, 2025
சென்னையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

சென்னையில் 10 இடங்களில் இன்று “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
திருவொற்றியூர், மணலி, இராயபுரம், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில் முகாம் நடைபெறுகிறது. முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
News September 15, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (15.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News September 15, 2025
சென்னையில் விஜய் பிரசாரத்திற்கு தவெக மனு

செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 25 வரை சென்னை முழுவதும் தங்களது கட்சியின் சார்பில் பிரசாரம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தவெக கட்சி சார்பில் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் மக்களுக்கான செயல்திட்டங்களை விளக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள், பிரச்சார வாகனங்கள், துண்டுப்பிரசுரங்கள் மூலமாக பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.