News October 24, 2024
வீட்டில் உறங்கிய மூதாட்டியிடம் தங்கநகை பறிப்பு

சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி(70). இவர் இன்று தனது வீட்டில் படுத்து உறங்கியபோது பின்பக்கம் வழியாக உள்ளே புகுந்த மர்மநபர் லட்சுமி அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார் சுதாரித்துக் கொண்ட லட்சுமி சங்கிலியைப் பிடித்துக் கொண்டபோது அதிலிருந்த சரடு குண்டு உள்ளிட்ட 2.5 பவுன் தங்க நகைகளை பறித்து தப்பி சென்றார். சீர்காழி போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர
Similar News
News November 8, 2025
மயிலாடுதுறை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு, தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
News November 7, 2025
மயிலாடுதுறை: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கை முடக்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT
News November 7, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

பொதுமக்கள் சாலைகளில் வாகனங்களின் கதவை திறக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் பின்னால் வாகனம் வருகிறதா என்பதை கவனித்து கதவை திறக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்கும் பொருட்டும் விபத்துகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் மாவட்ட காவல் துறை பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


