News March 19, 2024
வீட்டிலேயே தபால் ஓட்டு போடலாம் – கலெக்டர்

வரும் பாராளுமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 85 வயது உள்ள 22,592 மூத்த குடிமக்கள், 14,006 மாற்றுத் திறனாளிகள் வாக்குப் பதிவு நாளான ஏப்.19ல் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 12D படிவத்தை பூர்த்தி செய்து வாக்குச் சாவடி அலுவலர்களிடம் நேரில் ஏப்.24க்குள் வழங்கலாம் என கலெக்டர் சங்கீதா இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
மதுரை: 100% SIR நிறைவு – அலுவலர்களுக்கு பாராட்டு

இன்று (24.11.2025) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் இ.ஆ.ப., வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை 100% நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.
News November 24, 2025
மதுரை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 24, 2025
மதுரை அருகே செப்டிக் டேங்கிற்குள் விழுந்த பசு மாடு மீட்பு

மேலூர் மதுரை சாலையில், செக்போஸ்ட் அருகே அரசு கலைக் கல்லூரியில் உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த வளாகத்தில், போதிய சுற்று சுவர் இல்லாததால் வெளி நபர்கள் மற்றும் கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்க்குள் பசுமாடு ஒன்று விழுந்தது. தகவல் அறிந்த மேலூர் தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.


