News April 23, 2025
வீட்டின் தடுப்பு சுவரில் கார் மோதியதில் டிரைவர் பலி

இராமேஸ்வரம் எம்.ஆர்.டி நகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(47). இராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது தங்கச்சிமடம் அருகே நேற்று அதிகாலை தூக்க கலக்கத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். காயமடைந்த இருவரை மீட்ட போலீசார் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Similar News
News November 7, 2025
ராமநாதபுரத்தில் மீனவர் குறை தீர் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட மீனவர் குறை தீர் நாள் கூட்டம் இன்று (நவ. 7) மாலை 3:30 மணியளவில் மாவட்ட ஆட்சியரக குறை கேட்பு கூட்ட அரங்கில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அரசின் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்பதால் மீனவர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தியுள்ளார்.
News November 6, 2025
ராமேஸ்வரம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அப்டேட்

மானாமதுரை – ராமேஸ்வரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கும் காரணத்தினால் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் ராமேஸ்வரம் – மதுரை பகல் நேர ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் : 56714 இந்த ரயிலானது 7,8,9,10,12,14,15.11.2025 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
News November 6, 2025
ராம்நாடு: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…


