News March 21, 2024
வீட்டின் அருகே மது விற்றவர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சீகம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஆறுமுகம். இவர் வளையப்பட்டியில் உள்ள ஜீவா என்பவரின் வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த குளித்தலை போலீசார் மது விற்ற ஆறுமுகம் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News September 17, 2025
JUST IN:கரூர் திமுக முப்பெரும் விழாவில் திடீர் மழை!

கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று நடைபெற்று வரும் திமுகவின் முப்பெரும் விழாவில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சிப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட மூத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறார்.இந்தநிலையில் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென மழை பெய்தது. இதனால், விழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்.
News September 17, 2025
கரூரில் முதலமைச்சரை வரவேற்ற ஆட்சியர்!

கரூர் மாவட்டத்தில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக முப்பெரும் விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ தலைமையில் நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்பொழுது கரூருக்கு வருகை புரிந்தமைக்காக கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் புத்தகத்தை வழங்கி வரவேற்பு செய்தார்.
News September 17, 2025
திமுக முப்பெரும் விருதுகள் பெறுபவர்கள் யார்?

கரூர் மாவட்டம், கோடங்கிபட்டியில் செப்டம்பர் 17 இன்று நடைபெறும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் பெரியார் விருது எம்.பி கனிமொழி, அண்ணா விருது திரு.சீத்தாராமன், கலைஞர் விருது சோ.மா ராமச்சந்திரன், பாரிவேந்தன் விருது குளித்தலை சிவராமன், பேராசிரியர் விருது மருதூர் ராமலிங்கம் மு.க.ஸ்டாலின் விருது பொங்கலூர் பழனிச்சாமி ஆறு நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்க உள்ளார்.