News March 18, 2024
வீடு புகுந்து கணவன், மனைவி மீது தாக்குதல்

தூத்துக்குடி பிரேன் நகரை சேர்ந்தவர் முருகன். இவருக்கும் இவரது சகோதரர்களுக்கும் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக நேற்று மாலை முருகனின் சகோதரர் மாரிமுத்து உட்பட 8 பேர் வீடு புகுந்து முருகனையும் அவரது மனைவியையும் தாக்கியதுடன் வீட்டில் இருந்த பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதுபற்றி தென்பாகம் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
தூத்துக்குடி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இன்று தொடர் மழை பெய்து வருவதால் இன்று நடைபெற வேண்டிய மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். இதனை எல்லோருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News November 24, 2025
தூத்துக்குடி: VOTERID-க்கு வந்த புது அப்டேட்!

தூத்துக்குடி மக்களே, உங்க VOTERID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த வழி இருக்கு .
1.இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க..
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க..
News November 24, 2025
தூத்துக்குடி: 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

கடந்த மாதம் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் தூத்துக்குடி சுந்தரவேல் புரத்தைச் சேர்ந்த திரவியராஜ், அருண்குமார் ஆகியோர் மற்றும் ஆறுமுகநேரியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் காயல் பட்டினத்தை சேர்ந்த சதாம் உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்கள் மூவரையும் குண்டாஸில் கைது செய்ய எஸ்பி உத்தரவிட்டதை எடுத்து இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


