News March 28, 2024
வீடுவீடாக அழைப்பிதழ் வழங்கிய ஆட்சியர்

தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி பகுதியில் இன்று விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் திருவிழா விழிப்புணர்வு அழைப்பிதழை வீடு வீடாக சென்று ஆட்சித்தலைவர் ஷஜீவனா வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Similar News
News November 25, 2025
தேனியில் 100 -ஐ தொட்ட தக்காளி விலை

பெரியகுளம் சந்தையில் தினமும் 5 டன்னிற்கும் அதிகமாக தக்காளி விற்பனையாகும். தற்போது தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக 2 தினங்களுக்கு முன்பு தக்காளி கிலோ 70 என விலை உயர்ந்தது. தற்போது பெங்களூருவிலிருந்து ‘சாகோ’ என்ற ரகம் தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு அவை கிலோ 100 என விற்பனை செய்யப்படுகிறது.
News November 25, 2025
தேனி: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா??

தேனி மக்களே உங்க போனுக்கு தேவை இல்லாத லோன், கிரெடிட் கார்டு வேண்டுமா, இடம் விற்பனைன்னு போன் வருதா? இதை மத்திய அரசின் TRAI DND 3.0(Do Not Disturb) என்ற செயலியின் மூலம் தடுக்கலாம். இங்கு <
News November 25, 2025
தேனி: ஆற்றில் குதித்து பெண் தற்கொலை

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை பகுதியை சேர்ந்தவர் சாந்தி (38). இவருக்கும் இவரது கணவருக்கும் நேற்று முன் தினம் குடும்பத்தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு சாந்தி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (நவ.24) அவர் அப்பகுதியில் உள்ள வராக நதி ஆற்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.


