News April 28, 2025

வீடுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயில் உஷ்ணத்தால் இரவு நேரங்களில் மக்கள் வீடுகளை திறந்து வைத்து படுத்து உறங்குகின்றனர். இதனை பயன்படுத்தி திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை ஆகியவற்றை திருடும் சம்பவம் அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே இரவு நேரங்களில் வீடுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

Similar News

News November 24, 2025

காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர்களிடம் பெற்ற மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News November 24, 2025

காஞ்சி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News November 24, 2025

காஞ்சிபுரம்: B.E, B.Tech முடித்தால் சூப்பர் வேலை! APPLY

image

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள 134 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech, M.SC, அறிவியல் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர்கு ரூ.29,200 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!