News August 17, 2024

விஷவண்டு கடித்து பலி 6 வயது சிறுவன் பலி

image

திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மகன் கார்த்திக் (6), அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று மாலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருக்கும்போது, விஷவண்டுகள் அவரை கண்டித்துள்ளது. வலியில் துடித்த அவரை, பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News November 21, 2025

அம்பத்தூர்: தற்கொலை வழக்கில் மருத்துவர் கைது

image

அம்பத்தூரைச் சேர்ந்த மருத்துவர் அசாருதீன், பெண் மருத்துவரான சமீரா என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமீரா தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையால் தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக சமீராவின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து ஆர்.டி.ஓ விசாரணையில் இது உறுதியான நிலையில், தலைமறைவாக இருந்த அசாருதீனை நேற்று கைது செய்தனர்.

News November 21, 2025

திருவள்ளூர்: 206 கிலோ குட்கா பறிமுதல்

image

திருவள்ளூர்: மாதவரம் ரவுண்டானா அருகே இன்று(நவ.21) அதிகாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் காரில் இருந்த இருவர் தப்பி ஓடினர். இதனையடுத்து காரில் சென்று சோதனை நடத்திய போது மூட்டை மூட்டையாக 206 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 21, 2025

திருவள்ளூர்: கரண்ட் பில் குறைக்க எளிய வழி! CLICK NOW

image

திருவள்ளூரில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <>ஆன்லைன் <<>>மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். TANGEDCO இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர்!

error: Content is protected !!