News March 5, 2025
விஷம் குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி

சின்னசேலம் அடுத்த பெத்தானுாரை சேர்ந்தவர் அங்கமுத்து மனைவி சடையம்மாள் (55).மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.கடந்த 2ம் தேதி காலை வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்,நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் இறந்தார்.சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
கள்ளக்குறிச்சி: தங்க மோதிரத்தை தொலைத்த மாணவி விபரீத முடிவு!

மேல்வாழப்பாடியை சேர்ந்த சக்திவேல், செல்வியின் மகள் கௌரி (17), சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த கௌரியிடம், கையில் இருந்த தங்க மோதிரத்தை எங்கே என கேட்டு அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி பூச்சி மருந்தை குடித்து மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 5, 2025
கள்ளக்குறிச்சியில் மழையால் 24 வீடுகள் இடிந்து விழுந்தன!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக கொங்கராயபாளையம், பெருவெங்கூரை, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, குலதீபமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 24க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. அது தவிர, பசு மாடுகளும், 3 கன்றுகளும் உயிரிழந்துள்ளன. இது குறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News December 5, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் இரவு ரோந்து பணி விபரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று காவல் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் இரவு ரோந்து அதிகாரியாக காவல்துணை கண்காணிப்பாளர் தங்கவேலு நியமிக்கப்பட்டுள்ளார். இரவு நேரத்தில் ஏதேனும் அவசரம் என்றால் இந்த எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம் என தெரிவிப்பு.


