News April 19, 2025
விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி

ஆரணி, அக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயியான இவர் உடல்நிலை குறைவால் நீண்ட காலம் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷத்தை அருந்தி உள்ளார். ஆபத்தான நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News December 7, 2025
தி.மலைக்கு மத்திய அரசு செய்த நலத்திட்டங்கள்- நயினார் பட்டியல்!

திருவண்ணாமலைக்கு செய்த நலத்திட்டங்களை பாஜக தலைவர் பட்டியலிட்டார். திண்டிவனம்-செஞ்சி ரயில் பாதை அமைக்க 50 கோடி, விழுப்புரம்-வேலூர்- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அமைக்க 269 கோடி, கிருஷ்ணகிரி- திண்டிவனம் சாலை அமைக்க 562 கோடி, பி. எம்.கிசான் திட்டத்தில் 3.5 லட்சம் பேருக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதென பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் நேற்று பொதுக்கூட்டத்தில் பேசினார்.
News December 7, 2025
தி.மலை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – APPLY NOW!

தி.மலை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News December 7, 2025
தி.மலை : B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

தி.மலை மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் இங்கு <


